உக்ரைனின் (Ukraine) அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – 10 பேர் பலி!
உக்ரைன் (Ukraine) முழுவதும் நேற்று இரவு ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு உக்ரைனின் டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 12 குழந்தைகள் உள்பட 37 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் வோரோனெஷில் (Voronezh) உக்ரைன் நான்கு ATACMS ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதில் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லம் ஆகியவை சேதமடைந்ததாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளை கடந்து நடந்து வரும் இந்த போரால் இரு தரப்பில் இருந்தும் கடுமையான அழிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)





