இலங்கை

ஐ.நா பொதுச் சபையின் துணைத் தலைவராக இலங்கை தெரிவு!

ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா,  சிங்கப்பூர்,  இலங்கை,  உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை இந்த முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.

ஆபிரிக்கா சார்பாக காங்கோ,  காம்பியா,  மொராக்கோ,  செனகல்,  உகாண்டா,  சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா,  சிங்கப்பூர்,  இலங்கை,  உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும்,  லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகளுக்கு பொலிவியாவின் ப்ளூரினேஷனல் ஸ்டேட்,  சுரினாம் போன்ற நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐ.ந. பொதுச் சபையின் 78வது அமர்விற்கு துணைத் தலைவர்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களுக்கு ஐஸ்லாந்து,  நெதர்லாந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைமை நாடுகள்,  ஐ.நா.பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு சீனா,  பிரான்ஸ்,  ரஷ்யா,  பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!