மார்பில் டாட்டூ குத்திக்கொண்ட அஜித்… வைரலாகும் புதிய புகைப்படங்கள்
மார்பில் பச்சை குத்திக்கொண்ட நிலையில் நடிகர் அஜித் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் ரேஸ்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஜித் குமார் குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.
அஜித் மேலாடை அணியாத நிலையில் அவர் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டுள்ள ஃபோட்டோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அந்த டாட்டூ அஜித்தின் குல தெய்வமான பகவதியம்மன் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊட்டுகுளங்கரா பகவதி கோயில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெருவெம்பா கிராமத்தில் அமைந்துள்ள கோயில் ஆகும். இங்கு அஜித் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி சாமி தரிசனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






