போதைப்பொருளுடன் அமெரிக்கா நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல்!
																																		அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களுடன் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை அழிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது ட்ரூத் சோசியல் மீடியா (Truth Social Media) பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கப்பலில் போதைப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கப்பலில் நான்கு அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களில் இருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நீர்மூழ்கிக் கப்பல் நிலத்தை அடைந்திருந்தால், குறைந்தது 25,000 அமெரிக்கர்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த கப்பலில் மீதம் இருந்தவர்கள் அவர்களின் சொந்த நாடான ஈக்வடோர் (Ecuador) மற்றும் கொலம்பியாவுக்கு (Colombia) திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
        



                        
                            
