ஜாயிடம் முட்டி போட்டு காதலை சொன்ன மாதம்பட்டி ரங்கராஜ்
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமீப காலமாக சோசியல் மீடியாவில் பேசு பொருளாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவரது இரண்டாவது திருமணம்.
அவர் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் ஜாய் கிரிசில்டா உடன் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது அவரை பிரிந்து சென்றிருக்கிறார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஜாய் கிரில்டா, தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கேட்டும், தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்க எடுக்கக் கோரியும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஜாய் கிரிசில்டா புகார் அளித்தும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் டென்ஷன் ஆன நெட்டிசன்கள் ஆளும் கட்சியுடன் இணக்கமாக இருப்பதால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆக்ஷன் எடுக்கப்படவில்லை என கூறி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஜாய் கிரிசில்டா, யூடியூப் சேனலில் அளித்துள்ள பேட்டி செம வைரலாகி வருகிறது. தன் வீட்டில் வைத்து ஜாய் கிரிசில்டா கொடுத்துள்ள அந்த பேட்டியில், மாதம்பட்டி ரங்கராஜ், தன்னிடம் எவ்வளவு பாசமாக பழகினார் என்பதற்கான பல ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். வீடு முழுக்க அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் நிரம்பி இருந்தன.
அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளில் மாதம்பட்டி ரங்கராஜ், வாங்கிய விருதுகள் அனைத்தும் ஜாய் கிரிசில்டாவின் வீட்டில் தான் உள்ளது. தன்னிடம் இவ்வளவு பாசமாக பழகிவிட்டு, தற்போது தன்னை ஏமாற்றிவிட்டதாக அந்த பேட்டியிலேயே கண்ணீர் சிந்தி இருக்கிறார் ஜாய் கிரிசில்டா.
அதுமட்டுமின்றி அவர் தன் மகளை அடித்து துன்புறுத்தியதாக ஜாய் கிரில்டாவின் தாயும் புகார் தெரிவித்துள்ளார். இப்படி மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய பல பகீர் தகவல்களை வெளியிட்டு வரும் ஜாய் கிரிசில்டா, தான் அவருடைய பிறந்தநாளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் நிகழ்வையும் தற்போது வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் கடற்கரைக்கு மாதம்பட்டி ரங்கராஜை கண்ணைக்கட்டி அழைத்து செல்கிறார் ஜாய். அங்கு ஹேப்பி பர்த்டே என எழுதப்பட்டு, அழகாக அலங்காரம் செய்து, வெடி வெடித்து கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார் ஜாய் கிரிசில்டா. இதைப்பார்த்து எமோஷனல் ஆன மாதம்பட்டி ரங்கராஜ், முட்டி போட்டு அவருக்கு புரபோஸ் செய்தது மட்டுமின்றி, பல ஜென்மம் தாண்டி வந்த உறவே என கூறி இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது ஜாய் கிரிசில்டா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.





