இந்தியாவில் யாத்திரைக்கு மக்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – 06 பேர் படுகாயம்!

இந்தியாவில் புனித யாத்திரைத் தலத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி பாதையில் வியாழக்கிழமை காலை விமானம் பயணித்தபோது, கங்னானி அருகே உள்ள காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
விமானி கேப்டன் ராபின் சிங் உட்பட அதில் பயணம் செய்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)