படம் குறித்த உண்மை உடைத்த “குட் பேட் அக்லி” தயாரிப்பாளர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் முதன் முறையாக உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும். ஜிவி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் பாடல் வெளியானது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாடியிருந்தனர்.
அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் இப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், “குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் முதல் நாளில் வசூலித்ததை விட அதிக வசூல் செய்து சாதனை படைக்கும். இது என் வார்த்தைகள் அல்ல தமிழ்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்களின் வார்த்தை” என்று தெரிவித்துள்ளார்.