“குட் பேட் அக்லி”யில் கெஸ்ட் ரோலில் சிம்பு?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகிறது. அதையடுத்து இம்மாத இறுதியில் டிரைலர் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் சிம்பு நடித்திருந்த நிலையில், இப்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இது குறித்த தகவலை இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)