Oscars 2025 : பல விருதுகளை தட்டித்தூக்கிய படம்… முழு விபரம்

ஆஸ்கார்ஸ் 2025-ல் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை டச்சு மொழி திரைப்படமான ‘ஐ’ம் நாட் எ ரோபோ’ பெற்றது.
இந்த ஆண்டு ஆஸ்கார் விருது விழாவில் அனோரா திரைப்படம் தான் அதிக விருதுகளை வென்றுள்ளது.
அப்படம் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மிகே மேடிசன்), சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய ஐந்து பிரிவுகளில் அனோரா படத்துக்கு விருது கிடைத்தது.
அடுத்ததாக தி புரூட்டலிஸ்ட் திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது. அப்படத்தில் நடித்த அட்ரியன் ப்ராடி சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதும் இப்படத்திற்கு இசையமைத்த டேனியல் பிளம்பெர்க், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த லால் கிராலே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
மூன்று படங்களுக்கு 2 ஆஸ்கர் விருது கிடைத்துள்ளன. அதன்படி விக்கிட் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பு (பால் டேஸ்வெல்) மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய விருது கிடைத்தது.
அதேபோல் டூன் 2 படத்துக்கு சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த விஎஃப்எக்ஸ் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைத்தது. மேலும் எமிலியா பெரெஸ் படத்துக்கு சிறந்த துணை நடிகை (ஜோ சல்டானா) மற்றும் சிறந்த அசல் பாடல் ஆகிய விருதுகள் கிடைத்தன.