அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படுவாரா ஹரி : வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!

இளவரசர் ஹாரியின் அமெரிக்க விசா விண்ணப்பம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்த நீண்டகாலப் போராட்டம் நெருக்கடியான இடத்தை எட்டியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் சசெக்ஸ் பிரபு ஏன் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பியபோது, ஹாரியின் விசா விண்ணப்பத்திலிருந்து சில சீல் வைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிட அனுமதிக்கலாம் என்று ஒரு நீதிபதி பரிந்துரைத்தார்.
கோகைன், மரிஜுவானா மற்றும் சைகடெலிக் காளான்கள் போன்ற போதைப் பொருட்களை எடுது்துக்கொண்டமை குறித்து தனது சுயசரிதை புத்தமாக ஸ்பேர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா விசா திட்டங்களுக்கு அமைப்ப போதைப்பொருள் பாவனை குற்றமாக கருதப்படுகின்ற நிலையில் ஹரி நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கு தொடர்பான எந்த சட்ட ஆவணங்களை வெளியிட முடியும் என்பதை அறிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி 20 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.