இந்தோனேசியாலில் பண்ணையிலிருந்து தப்பிய முதலைகள் – அச்சத்தில் மக்கள்
இந்தோனேசியாவின் Batam தீவில் உள்ள முதலைப் பண்ணையிலிருந்து வெள்ளத்தினால் முதலைகள் தப்பியதால் அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
பண்ணையைச் சுற்றி இருந்த தடுப்பு கன மழையினால் சரிந்தது. அங்குள்ள உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய பாதுகாப்பை நினைத்து மீன் பிடிக்கச் செல்ல அஞ்சுகின்றனர்.
அதற்குப் பதிலாக அவர்கள் தப்பிய முதலைகளைத் தேடும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
எத்தனை முதலைகள் தப்பின என்று சரியாகத் தெரியவில்லை என்றாலும் இதுவரை 23 முதலைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் அதிகமான முதலைகள் பிடிபடாமல் உள்ளன. குடியிருப்பு வட்டாரங்களுக்கு அருகே உள்ள கடலிலும் ஆறுகளிலும் முதலைகள் இருப்பதை மீனவர்கள் கண்டனர்.
(Visited 2 times, 2 visits today)