மகாராஜா இயக்குனருக்கு அடித்த அதிஷ்டம்
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா.
ஒரு அப்பாவிற்கும், மகளுக்குமான பிணைப்பை ஆழமாக எடுத்து இந்த சமூகத்திற்கு காட்டியிருக்கிறது.
தனது மகளுக்காக பாதிக்கப்பட்ட தந்தையாக போராடும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.
தனது 50வது படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி விஜய் சேதுபதி நடித்த படம் கடந்த ஜுன் 14ம் தேதி திரைக்கு வந்தது. ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகளவில் ரூ. 186 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
படம் அண்மையில் சீனாவில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.
தமிழகத்தை தாண்டி சீனாவிலும் வெற்றிநடைபோடும் இந்த படத்தின் இயக்குனர் நிதிலன் சாமிநாதனுக்கு தயாரிப்பு நிறுவனம் ரூ. 80 லட்சம் மதிப்பு கொண்ட BMW காரை பரிசாக கொடுத்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் மகாராஜவின் ஹீரோவான விஜய் சேதுபதியே அந்த காரை பரிசாக கொடுத்திருக்கிறார்