தென் கொரியாவில் கட்டாய இராணுவச் சேவை – அச்சத்தில் எடையை வளர்த்த நபர்
தென் கொரியாவில் கட்டாய இராணுவச் சேவையைத் தவிர்ப்பதற்காக நபர் ஒருவர் வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்துள்ளார்.
26 வயதான இளைஞன் அரசாங்கத்தை ஏமாற்றியதற்காக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
என்ன சாப்பிட்டால் எடை கூடி ராணுவச் சேவையில் இருந்து தப்பலாம் என்று யோசனை கொடுத்த நண்பருக்கு ஆறு மாதச் சிறை. அதுவும் ஒத்தி வைக்கப்பட்டது.
இராணுவத்திற்கான உடல் பரிசோதனைக்கு முன்பு நபர் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளத் தொடங்கியுள்ளார்.
முதல் பரிசோதனையில் அவர் சண்டைக்குத் தயாரான உடல் உறுதி பெற்றிருந்தார். இறுதிச் சோதனையில் அவரின் எடை 102 கிலோகிராமாகும். சட்டென்று ஏன் இந்த மாற்றம் என்று சந்தேகம் வந்தது.
இராணுவச் சேவையில் சண்டையில் பங்குபெறாத மற்ற பணிகளுக்கு அவர் அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டது.
(Visited 1 times, 1 visits today)