போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் கைது

வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நபரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
அங்கு அவரது பையில் 84 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 600 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேகநபர் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 10 times, 1 visits today)