சைபர் குற்றங்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இணைய குற்றங்களின் அதிகரிப்பு குறித்த கவலைகளை எழுப்பும் வகையில், இளைஞர்கள் தங்கள் நடத்தையின் தாக்கங்களை ஆன்லைனில் புரிந்துகொள்ள உதவுமாறு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய குற்றவியல் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
சமீபத்திய கணக்கெடுப்பில், 10-15 வயதிற்கு இடைப்பட்ட 20 சதவீதமானோர் கணினி முறைமைகள் மற்றும் தரவுகளை அங்கீகரிக்கப்படாத அணுகலைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் கணினி தவறாகப் பயன்படுத்தும் சட்டத்தை மீறும் நடத்தைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பெற்றோர்களிடம் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணினி துஷ்பிரயோகச் சட்டக் குற்றங்களைச் செய்தால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் பாடசாலைகளைில் இருந்து வெளியேற்றப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வரம்புகளையும் அவர்கள் கொண்டிருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறைந்த அளவிலான சைபர் குற்றங்களில் பங்கேற்கும் பல குற்றவாளிகள் தங்கள் செயல்கள் குற்றவியல் என்பதை அறிந்திருக்கவில்லை, ஆனால் குறுகிய காலத்திற்குப் பிறகு மிகவும் சிக்கலான, கடுமையான குற்றங்களில் பங்கேற்க முன்னேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.