ஹிந்தி பிக் பாஸில் தமிழில் பேசி மொக்கை வாங்கிய ஷ்ருதிகா…
தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் ஷ்ருதிகா அர்ஜுன். மறைந்த மூத்த நடிகர், தேங்கா ஸ்ரீநிவாசனின் பேத்தியான இவர், இளம் வயதில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் பிரபலம் ஆனார். இதில் இவர் டைட்டில் வின்னர் ஆனார்.
இவர், முதன்முதலில் ஸ்ரீ என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிதும் பெற்றிபெறவில்லை.
பின் மாதவனுடன் நளதமயந்தி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தித்திக்குதே படத்திலும் துணை கதாப்பாத்திரமாக வந்தார்.
ஒரு சில படங்களிலேயே நடித்து, திரையுலகை விட்டு விலகிய இவர், அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, செட்டில் ஆகிவிட்டார்.
இவர், தற்போது இந்தி பிக்பாஸிற்குள் நுழையும், முதல் தென்னிந்திய தமிழ் பெண்ணாக இருக்கிறார்.
தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.
இந்தி பிக்பாஸை, சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதில், கலந்து கொண்ட ஷ்ருதிகா அவரை “வணக்கம்” தெரிவிக்க சொல்லி மகிழ்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், இந்தி சின்னத்திரை உலகிற்குள் நுழைந்துள்ள ஷ்ருதிகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென தமிழில் பேசிய ஷ்ருதிகாவின் வீடியோ வைரலாகி வருகின்மை குறிப்பிடத்தக்கது.