ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதும் கூட முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 50 STF அதிகாரிகள், 06 உயரடுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழு உட்பட 163 பேர் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ரஜித் கீர்த்தி தென்னகோன் உட்பட பலர் இந்த பொய்யான செய்தியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.
(Visited 5 times, 1 visits today)





