தமிழ் ரொக்கர்ஸ் அட்மின் கைது – வெளியான பகீர் கும்பல்
மதுரையைச் சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கேரளாவில் ராயன் திரைப்படத்தை திரையரங்கில் பதிவு செய்துகொண்டிருந்த போது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது தமிழ்ராக்கர்ஸ் நிறுவனம்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு CD, DVD இருந்த காலத்தில் Tamil Rokkers என்ற பெயரை கேட்டாலே திரை உலகினர் அதிர்ச்சி அடையும் நிலை இருந்தது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என எந்த மொழி படங்களாக இருந்தாலும் அதை வௌியீடு செய்த முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தது தமிழ் ராக்கர்ஸ்.
தமிழ் ராக்கர்ஸ்க்கு பயந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் நீதிமன்றங்களை நாடினாலும், அந்த படம் எப்படியாவது இணையத்தில் வெளியாகிவிடும்.
திரையுலகினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த தமிழ் ராக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் யார், அதை நிர்வகிப்பவர்கள் யார் என்ற விவரங்கள் இதுவரை மர்மமாகவே இருக்கிறது.
இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் நிறுவன அட்மின் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டிருப்பது திரைப்பட தயாரிப்பாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஸ்டீவன் என்ற பெயரடைய குறித்த நபர் ராயன் திரைப்படத்தை கள்ளத்தனமாக பதிவுசெய்த நிலையில் சிக்கியுள்ளார்.
இவருடன் இணைந்து செயற்பட்ட மேலும் 12 பேர் தொடர்பான தகவல்களும் வௌியாகியுள்ளது.