ஸ்லோவாக்கியாவில் ரயில் மற்றும் பேருந்து மோதி விபத்து : நால்வர் பலி
தெற்கு ஸ்லோவாக்கியாவில் பேருந்து மீது ரயில் மோதியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து நோவ் சாம்கி நகரில் மாலை 5 மணிக்கு (1500 GMT) நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறப்பு மற்றும் காயங்கள் ஸ்லோவாக்கியாவின் மீட்பு சேவையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ரயிலின் என்ஜின் தீப்பிடித்து எரிவதை வெளியான வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
உள்துறை மந்திரி Matus Sutai Estok விபத்து நடந்த இடத்திற்கு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்
ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவை புடாபெஸ்டுடன் இணைக்கும் முக்கிய ரயில் பாதை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டது.
பாதிக்கப்பட்ட ரயிலில் சிக்கித் தவித்த 100 க்கும் மேற்பட்ட பயணிகள் ஹங்கேரிய எல்லையில் உள்ள ஸ்டுரோவோ நகரத்திற்கு பேருந்துகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர் என்று ZSSK தெரிவித்துள்ளது.