Site icon Tamil News

இலங்கையில் உயர் கல்விக்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ரூபா மஹாபொல மற்றும் உதவித்தொகைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக கல்வி மற்றும் உயர்கல்வித்துறையின் அபிவிருத்திக்காக இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கீழ்க்கண்டவாறு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

*பாடசாலை மாணவர்களின் சுகாதார காப்புறுதிக்காக 2000 மில்லியன் ரூபா.

* குரு அபிமானி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 550 மில்லியன் ரூபா.

*இலவச பள்ளி பாட புத்தகங்களுக்கு  20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*இலவச பள்ளி சீருடைகளுக்கு  6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*கடினமான பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் காலணிகளுக்கு 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*தரம் 05 இல் பர்சரிகளுக்கு  938 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*அரசு சாரா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்திற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*பள்ளி மற்றும் உயர்கல்வி பருவச் சீட்டுகளுக்கு  10,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version