ட்ரோன் தாக்குதல் – ரஷ்யாவில் விமான சேவைகள் பாதிப்பு!
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மொஸ்கோவில் உள்ள நான்கு விமான நிலையங்களில் மூன்றை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வுனுகோவோ (Vnukovo) விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், தாக்குதலுக்கு வந்த 27 உக்ரைனிய ட்ரோன்களையும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










