ஐரோப்பா செய்தி

செய்தித்தாளில் வந்த புகைப்படம்; 7 கோடி ரூபாவை இழந்த பெண்

  • February 29, 2024
  • 0 Comments

டப்ளின்-அயர்லாந்தில் ஒரு பெண் $820,000 (சுமார் 7 கோடி – இந்திய ரூபா) மதிப்புள்ள உரிமைகோரலை இழக்க காரணமாக இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. கார் விபத்துக்குப் பிறகு வலியால் அவதிப்பட்டு, கிறிஸ்துமஸ் மரம் எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது. நீதிமன்றம் புகைப்படம் மற்றும் வீடியோவைப் பார்த்தது மற்றும் காப்பீட்டு கோரிக்கையை நிராகரித்தது. 36 வயதான கமிலா கிராப்ஸ்கா என்ற பெண், முதுகு மற்றும் கழுத்து காயங்கள் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை […]

உலகம் செய்தி

ரமழானில் அக்ஸா மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் – அமெரிக்கா

  • February 29, 2024
  • 0 Comments

காஸா-ரம்ஜான் காலத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருந்து முஸ்லிம்கள் அல்-அக்ஸா மசூதிக்கு வழிபாட்டிற்காக செல்வது தடுக்கப்படும் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலையீடு ஏற்பட்டது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரமலான் மாதத்தில் மக்கள் தொழுகைக்காக அக்சா வளாகத்திற்கு வருவதை தடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலிடம் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவுக்கு சென்ற பாக் விமானப் பணிப்பெண்ணை காணவில்லை

  • February 29, 2024
  • 0 Comments

இஸ்லாமாபாத் – பாகிஸ்தானில் இருந்து கனடா சென்ற பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானத்தின் ஏர் ஹோஸ்டஸ் காணாமல் போயுள்ளார். பிப்ரவரி 26 அன்று, கனடாவின் டொராண்டோவில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து விமானப் பணிப்பெண் மரியம் ராசா காணாமல் போயுள்ளார். மறுநாள் கனடாவில் இருந்து கராச்சிக்குத் திரும்ப வேண்டிய விமானத்தில் மரியம் ராசாவைக் காணாததால் சோதனையின் போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டது. அவர்கள் தங்கியிருந்த டொராண்டோவில் உள்ள ஹோட்டலை அடைந்து அறையைச் சோதனையிட்டபோது, ​​விமான […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • February 29, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் தொழில் அமைச்சர் ஜெர்மனியில் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கு இவ்வருடம் மீண்டும் ஓய்வூதியத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் தற்பொழுது பண வீக்கம் 2.5 சதவீதமாக இருக்கின்ற காரணத்தினால் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கு இப் பண வீக்கத்தை சமநிலையை கொண்டு வருவதற்காகவே ஓய்வூதியத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு தான் உத்தேசித்துள்ளதாக கூறி இருக்கின்றார். அதாவது கடந்த வருடம் கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஓய்வு ஊதியக்காரர்களுக்கு ஓய்வு ஊதியத்தில் 5.8 சதவீதமான […]

இலங்கை செய்தி

இரண்டு இரட்டைக் குழந்தைகள் தேரர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம்?

  • February 29, 2024
  • 0 Comments

இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் தேரர் தலா 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்கள் தேரர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தேரர் யந்திரம் சூனியம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு குழந்தைகளில் ஒருவர் கடந்த […]

இலங்கை செய்தி

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு

  • February 29, 2024
  • 0 Comments

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல் சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தை சபாநாயகர் நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதன்படி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிக்கிறது.

இலங்கை செய்தி

நுகேகொடையில் எட்டு பேர் கொண்ட குழுவொன்று அதிகாரி மீது தாக்குதல்

  • February 29, 2024
  • 0 Comments

நுகேகொட நாவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்குள் புகுந்த எட்டு பேர் கொண்ட கும்பல் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 33 வயதான அதிகாரி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுகேகொட வெலிபார்க்கிற்கு அருகில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபைக்கு இடையில் ஏற்பட்ட சம்பவம் காரணமாக நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் […]

உலகம் செய்தி

தென் கொரியாவில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை அடைந்தது

  • February 29, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி தென்கொரியாவின் பிறப்பு விகிதம் 0.72 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023ல் மட்டும் பிறப்பு விகிதம் 8 சதவீதம் குறைந்துள்ளது. சியோலில் மட்டும் பிறப்பு விகிதம் 0.55 சதவீதம். குழந்தை வளர்ப்பு செலவு அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே குழந்தையை வளர்க்க அதிக செலவு செய்யும் நாடு தென் கொரியா. பெண்கள் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு வெளியான தகவல்

  • February 29, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில்எதிர்பாராமல் வேலை இழந்தவர்களுக்கு ஆதரவு தரும் புதிய திட்டம் பற்றி துணைப்பிரதமர் Lawrence Wong நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். புதிய திட்டம், வேலையில்லாதவர்கள் பயிற்சிபெற வகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான செலவு, வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதங்களை ஒட்டி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார். வேலையில்லாதோருக்கான காப்புறுதியின் மூலம் பணம் தரவேண்டும் என்று மன்ற உறுப்பினர்கள் சிலர் சொன்ன கருத்தை அவர் நிராகரித்தார். நிதியமைச்சருமான […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • February 29, 2024
  • 0 Comments

இலங்கையில் நேற்யை தினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று இவ்வாறு விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை நேற்று (28) 178,600 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேபோன்று, 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாயாவும், 21 கெரட் தங்கப் பவுண் 156,350 ரூபாயாவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!