கிரீன்லாந்தில் படைகளைக் குவிக்கிறது டென்மார்க்: ஆர்க்டிக் பிராந்தியத்தில் போர் மேகங்கள்
அமெரிக்காவின் கடுமையாக அச்சுறுத்தலை தொடர்ந்து டென்மார்க் கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.
நேற்று மாலை மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கில் (Kangerlussuaq) டேனிஷ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைவர் பீட்டர் போய்சன் (Peter Boyesen) உறுதிப்படுத்தியுள்ளார்.
டேனிஷ் துருப்புக்கள் ஆர்க்டிக் பிரதேசத்தில் தரையிறங்கியதாகவும், ஒபரேஷன் ஆர்க்டிக் எண்டியூரன்ஸ் (Operation Arctic Endurance) என அழைக்கப்படும் பன்னாட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க முன்னர் அனுப்பப்பட்ட சுமார் 60 பேருடன் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை கட்டுப்படுத்த டென்மார்க் திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளது.
கிரீன்லாந்து ஒருபோதும் விற்பனைக்கு இல்லை என்றும், அந்தத் தீவை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற அமெரிக்கா முயன்றால், அது நேட்டோ (NATO) பாதுகாப்பு கூட்டணி சிதைவதற்கே வழிவகுக்கும் என்றும் டென்மார்க் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
எவ்வாறாயினும், கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று டிரம்ப் உறுதியாகவுள்ளார்.
டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்க-ஐரோப்பிய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், 32 நாடுகள் கொண்ட அட்லாண்டிக் பாதுகாப்பு கூட்டணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.





