“உள்வீட்டுப் பிரச்சினை மிகக்கேவலமாக உள்ளது”
“தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்வீட்டுப் பிரச்சினை மிகக் கேவலமாக உள்ளது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் S. Siritharan தெரிவித்தார்.
“நாடாளுமன்றக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதைக்கூட இனிப்பு வழங்கி, பெனர் கட்டி கொண்டாடுகின்றனர். எமது மண்ணில் இதற்கு முன்னர் இப்படி நடந்துள்ளதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
“ எனக்கு எதிராக மிகப்பெரிய உளவியல் போர் தொடுக்கப்படுகின்றது. இந்த உளவியல் போரால்தான் கட்சியில் இருந்து பலர் வெளியேறினார்கள்.
என்.பி.பி.மீது தமிழ் மக்கள் காதல்கொண்டு வாக்களிக்கவில்லை.
எமது கட்சிமீது இருந்த கோபத்தின் வெளிப்படுதான் அது. இது தமிழ் மக்கள் எமக்கு வழங்கிய தண்டனையாகும். இனியும் திருந்தாவிட்டால் மக்கள் முன் செல்ல முடியாது.”எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.
அதேவேளை, சிறிதரன் யாரென்பது தமிழ் மக்களுக்கு தெரியும். நாட்டை விட்டு ஓடியவன் கிடையாது. பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் இங்குதான் உள்ளனர்.
எனக்கு பதவி முக்கியம் அல்ல. நாடாளுமன்றக்குழுத் தலைவர் பதவிக்காக அடிபடபோவதில்லை. ஜனநாயக முறையிலேயே பதவிக்கு வந்தேன்.” எனவும் சிறிதரன் குறிப்பிட்டார்.





