ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு – மக்களின் நடைமுறையில் மாற்றம்
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்களின் கடன் அட்டைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
பெடரல் ரிசர்வ் வங்கி அறிக்கைகளின்படி, ஜனவரி மாதத்தில் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி இந்த நாட்டில் செய்யப்பட்ட கொள்முதல் அளவு 33.5 பில்லியன் டொலர்களாகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அல்லது 4.9 பில்லியன் டொலர்கள் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய கணக்கெடுப்பில், 1/4 ஆஸ்திரேலியர்கள் கடன் அட்டை இல்லாமல் தங்கள் செலவுகளை நிர்வகிப்பது கடினம் என்று கூறியுள்ளனர். மே மாதத்தில் இது 18 சதவீதமாக இருந்தது.
ஆஸ்திரேலியர்கள் உணவு வாங்குவதற்கு பெரும்பாலும் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது தெரியவந்தது.
இதற்கிடையில், கடன் அட்டைகள் மூலம் செலவழிக்கும் அதிகபட்ச வரம்பை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.