அவுஸ்ரேலியாவில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு!
கிழக்கு அவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்ஸியஸை எட்டியுள்ளது.
சிட்னியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 99.7 பரனைட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகரித்த வெப்பநிலை காரணமாக பாடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னிக்கு மேற்கே 35 மைல் தொலைவில் உள்ள பென்ரித்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 40.1 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியதாக கூறப்படுகிறது.
அத்துடன் அதிகரித்த வெப்பநிலை காரணமாக 40 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்காரணமாக நியூ சவுத் வேல்ஸில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக கூறப்படுகிறது.
காட்டுத்தீ வேகமாக பரவுகின்ற நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 2 times, 1 visits today)