கிரீஸ் ரயில் விபத்து : அரசாங்கங்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது என தொழிற்சஙகம் முழக்கம்!

கிரீஸ் ரயில் விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கிரேக்க ரயில்வே ஊழியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கிரீஸின் ரயில்வே ஊழியர்களின் கூட்டமைப்பு 24 மணி நேர பணிபகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது அரசாங்கங்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
துரதிஷ்டவசமாக நிரந்தர பணியாளர்களை சேர்ப்பது, சிறந்த பயிற்சி மற்றும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான எங்கள் நிலையான கோரிக்கைகள் நிரந்தரமாக குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)