வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்துள்ள ஜேர்மனி; பாதிக்கப்பட்டுள்ள மொத்த போக்குவரத்து
தொழிலாளர்கள் யூனியன் அழைப்பு விடுத்த வேலைநிறுத்ததால் ஜேர்மனியே ஸ்தம்பித்துப்போயுள்ளது.
ஜேர்மனியில், ஊதிய உயர்வு முதலான காரணங்களுக்காக, ஜேர்மன் தொழிலாளர் யூனியன்கள், வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.இதனால், விமானம், ரயில்கள், பேருந்துகள், ட்ராம்கள் என மொத்த போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்கள், துறைமுகங்கள், ரயில்வே ஊழியர்கள், பேருந்துகள் மற்றும் சுரங்க ரயில் ஊழியர்கள் முதலானோர் பங்கேற்றுள்ள இந்த வேலைநிறுத்தத்தை, ஊடகங்கள், மெகா வேலைநிறுத்தம் என வர்ணித்துள்ளன.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ளதால், சரக்குப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிலர் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி பயணிக்க, வீடுகளில் இருந்தவண்ணம் பணியாற்ற முடிந்தவர்கள் வீடுகளிலிருந்தே பணிகளைச் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.