இந்தியா செய்தி

பிறந்த குழந்தையை காட்டு மிருகங்கள் இழுத்துச்சென்றதாக கூறிய தாய் -ஊர் மக்களால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தனக்கு பிறந்தது பெண் குழந்தை என தெரிந்ததும் பிறந்த மறுநாளே தாயே கழூத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலசோர் மாவட்டத்தில் உள்ள கமர்தா காவல் நிலையத்திற்குட்பட்ட சியாருய் கிராமத்தில் பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக பந்தனா பத்ரா என்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தகவல்களின்படி, குழந்தை காணாமல் போனதை கிராம மக்கள் கவனித்ததை அடுத்து, அவர்கள் பந்தனாவிடம், குழந்தை என விசாரித்துள்ளனர். அதற்கு அவர், மார்ச் 5 அன்று குழந்தையை சில வன விலங்குகள் இழுத்துச் சென்றதாக கிராம மக்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, சந்தேகமாடைந்த கிராம மக்கள் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அருகில் உள்ள குளத்திலிருந்து குழந்தையின் உடலை பொலிஸார் மீட்டனர்.இதையடுத்து, பந்தனாவின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பந்தனா கைது செய்யப்பட்டு அவர் மீது ஐபிசி 302 மற்றும் 201 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜலேஸ்வர்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், பந்தனா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.விசாரணையில், பெண் குழந்தை என்பதால் பிறந்த மறுநாளே பந்தனா கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் யாருக்கும் தெரியாமல் குளத்தில் வீசியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி