சீனாவின் வூஹான் சந்தையிலேயே முதலில் தொற்றிய கொரோனா – சிக்கிய ஆதாரம்
சீனாவின் வூஹான் சந்தையில் கொரோனா முதன்முதலில் தொற்றியதாகக் கூறப்படுவதற்கு ஆதரவாகப் புதிய தகவல் கிடைத்துள்ளது.
கொரோனா முதன்முதலில் விலங்குகளில் தோன்றி மனிதர்களுக்குப் பரவியிருக்கக்கூடும் என்று மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் ஹுவனான் கடலுணவுச் சந்தையில் சீன ஆய்வாளர்கள் மாதிரிகளைச் சேகரித்திருந்தனர்.
அவற்றில் சிலவற்றில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மாதிரிகளில் raccoon நாய்கள், புனுகுப் பூனைகள் (palm civets), Amur வகை முள்ளெலிகள் போன்ற விலங்குகளின் மரபணு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அனைத்துலக ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக, raccoon நாய்கள் கொரோனா கிருமி போன்றவற்றைப் பரப்பக்கூடியவை.
ஆனால் சோதிக்கப்பட்ட மாதிரிகளில் அவற்றின் மரபணுவில்தான் வைரஸ் இருந்தது என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லை.
அவற்றின் வழி வைரஸ்கள் மனிதர்களுக்குப் பரவியிருக்கக்கூடும் என்பதற்கும் உறுதியான தகவல் இல்லை.