ஆசியா

சீன அதிபருடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திடீர் சந்திப்பு!

உக்ரைன் மற்றும் ரஷ்யா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி அரசும் ரஷ்யாவிடம் இருந்து சீனா விலகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியதுடன், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் சீனாவுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தில், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசுகிறார்.

இதுபற்றி மேக்ரான் கூறும்போது, அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே, நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்து உள்ளேன் என தெரிவித்து உள்ளார். அவருடன், எங்களுடைய வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மேக்ரான் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

ஒருபுறம் அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு எதிராகவும், எச்சரிக்கை விடுவது போலவும் தங்களை காட்டி கொண்டாலும், அந்நாட்டுடனான உறவை தொடர்வதிலும் தயக்கமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!