யாழ் பெண்கள் செய்த மோசமான செயல்
யாழப்பாணத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்தார் நாட்டில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்காக கூறி ஒருவரிடம் 6 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடிக்கு உள்ளான நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தின் செய்த முறைப்பபாட்டுக்கு அமைய இந்த பெண்களை தாம் கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேசத்தில் வசிக்கும் 23 மற்றும் 42 வயதான பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)





