WC – இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்திய அணி
டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர்.
இக்கட்டான நிலையில் ரோகித்துடன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அரைசதம் அடித்த நிலையில், 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 17 ரன்களுடனும், அர்ஸ்தீப் சிங் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக ஜாஸ் பட்லர் – பில் சால்ட் களமிறங்கினர்.
ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிறிது நேரத்தில் சால்ட்டும்(5) அவுட்டானார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.