தமிழ் மக்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் பாத்திரம் கழுவுகின்றார்!! காரணம் தெரியுமா?

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாகவும் நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் தொடர்பில் செய்தி வெளியாகி உள்ளது.
இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
மேலும் பொற்கோவிலில் நேர்த்திக்கடனின் ஒரு பகுதியாக அங்குள்ள பாத்திரங்களை சுத்தப்படுத்தும் இடத்திற்கு சென்று மணலால் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து சேவையும் செய்துள்ளார் வித்யுத் ஜாம்வால்.
இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
(Visited 47 times, 1 visits today)