புறப்படும்போது தீப்பிடித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் : பீதியில் கத்தி கூச்சலிட்ட பயணிகள்!
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரம் புறப்படும்போது தீப்பிடித்துள்ளது. இதனால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டெக்சாஸில் புறப்படும் போது ஓடுபாதையில் அதன் இயந்திரம் தீப்பிடித்ததால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் பீதி பரவியது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களை ஏற்றி நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது குறித்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விமான நிறுவனம் விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)