ஹரினுக்கும் பவித்ராவுக்கும் மேலும் இரண்டு அமைச்சர் பதவிகள்
 
																																		விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும், நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாக இருந்த பதவிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹரின் பெர்னாண்டோ மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் ஏனைய அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக இந்த அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
