மினசோட்டாவில் போராட்டங்களை ஒடுக்க கிளர்ச்சி சட்டத்தை அமுல்படுத்தும் ட்ரம்ப்?
மினசோட்டாவில் கூட்டாட்சி குடியேற்ற அதிகாரிகளின் எழுச்சிக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சுமார் 1,500 வீரர்கள் அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மினியாபோலிஸ் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைக்கு பதிலளிக்க துருப்புக்கள் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையை “விவேகமான திட்டமிடல்” என்று அவர்கள் விவரித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரியால் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து குடியேற்ற முகவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போராட்டங்களை நிறுத்த இராணுவ வீரர்களை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கமையவே 19 ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட கிளர்ச்சி சட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக மிரட்டியுள்ளார்.
அரிதாகவே செயல்படுத்தப்பட்ட இந்த சட்டம், சட்ட அமலாக்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவு பெரிய உள்நாட்டு கலவரங்கள் அல்லது சட்டவிரோத செயல்பாடுகளின் போது, அதிபரின் உத்தரவின் பேரில் மத்திய இராணுவத்தை நிலைநிறுத்த அனுமதிக்கிறது.





