கென்யாவில் விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம் : இருவர் பலி!

கென்யாவில் பயிற்சி விமானம் ஒன்று பயணிகள் விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
கென்யாவின் தலைநகரில் உள்ள நைரோபி தேசிய பூங்காவிற்கு மேலே இவவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. Safarilink Aviation மூலம் இயக்கப்படும் Dash 8 என்ற பெரிய விமானத்தில் 5 பணியாளர்கள் உட்பட 44 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் பயிற்சி விமானத்தில் இருந்து மாணவர் ஒருவரும் பயிற்சியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)