டோக்கியோவில் ரயில் சேவைகள் பாதிப்பு – 673000 பயணிகள் தவிப்பு!
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இன்று ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரிய மின் தடை காரணமாக யமனோட் (Yamanote) மற்றும் கெய்ஹின்-டோஹோகு (Keihin-Tohoku ) பாதைகளின் சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏறக்குறைய 673000 பயணிகள் ரயில் நிலையங்களில் சிக்கி தவித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக 20 முதல் 60 வயதுடைய 10 பேர் குமட்டல், மூச்சுத் திணறல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு அளித்ததாகவும், அவர்களில் 05 பேர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமாச்சி (Tamachi) நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஒரு மின்மாற்றியில் இருந்து தீப்பிழம்புகள் வந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் தடைக்கும் தீ விபத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





