டொயோட்டா நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தியது!
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, ஜப்பானில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உற்பத்தி நடவடிக்கையில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன் காரணமாக உலகிலேயே அதிகம் விற்பனையாகும் காரின் உற்பத்தி ஜப்பானில் இன்று (29.08) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் ஆக்சஸெரீகளுக்கான ஆர்டர்களை ஃபார்வேர்டு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பிழையை அடையாளம் காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது சைபர் தாக்குதல் என்று நம்பவில்லை எனக் கூறியுள்ளார்.
சமீபகாலமாக ஜப்பானில் அமைந்துள்ள டொயோட்டா தொழிற்சாலைகளுக்கு பல்வேறு தடைகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)