செர்பியாவிற்கும் போஸ்னியாவிற்கும் இடையில் ஆற்றில் மூழ்கி மூன்று புலம்பெயர்ந்தோர் பலி: பலர் மாயம்
செர்பியாவிலிருந்து போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு டிரினா ஆற்றைக் கடக்க முயன்றபோது மூன்று புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.மேலும் பலரைக் காணவில்லை என்று மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி, படகில் 30 பேர் இருந்தனர், அவர்களில் 15 பேர் கரையை அடைந்தனர்” என்று சிவில் பாதுகாப்பு இயக்குனர் போரிஸ் டிர்னினிக் கூறியுள்ளார்.
கப்பலில் 25 பேர் இருந்ததாகவும், அவர்களில் 18 பேர் மட்டுமே போஸ்னியப் பகுதியை அடைந்ததாகவும் உள்துறை அமைச்சர் ஐவிகா டாசிக் கூறினார்.
மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், துருக்கி, பல்கேரியா, வடக்கு மாசிடோனியா மற்றும் செர்பியா வழியாகச் செல்லும் பால்கன் பாதை என அழைக்கப்படுவதைப் பயன்படுத்தி, செல்வம் மிக்க மேற்கத்திய நாடுகளைச் சென்றடைகின்றனர்.
பல புலம்பெயர்ந்தோர் கடத்தல்காரர்களின் விரிவான வலைப்பின்னல்களின் உதவியுடன் எல்லைகளை கடக்கிறார்கள், மேலும் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.