ஆசியா

சிங்கப்பூரில் அச்சுறுத்தும் கொரோனா – பொது மக்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் புதிதாக கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளிர்காலம் தொடங்கியுள்ள வேளையில் வெப்பமான சில நாடுகளில் சுவாச நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

சீனாவில் பிள்ளைகளும், பதின்ம வயதினரும் பெருமளவில் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. , சிங்கப்பூரில் கடுமையான சுவாசக் கோளாற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அறிகுறி ஏதும் இல்லை என்றது சுகாதார அமைச்சு.

ஆனால், சென்ற மாதம் 19இலிருந்து 25 ஆம் திகதி வரை கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதற்கு முந்திய வாரத்தை விட ஒரு மடங்கு அதிகரித்து 22,000 தாண்டியது.

மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் நாள்தோறும் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆண்டு இறுதியில் அதிகமானோர் பயணம் செய்வது, மக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது முதலிய காரணங்களால் நோய்ப்பரவல் அதிகரித்திருக்கலாம்.

இதனால், மக்கள் நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்