கனடாவில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீ பரவியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாய் அதிகரித்ததால் காட்டு தீ ஏற்படுகிறது.
கனடாவின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் வறண்டு கிடக்கின்றன.
நேற்று முன்தினம அல்பெர்டா (Alberta) மாநிலத்தின் 70க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவியது. சில இடங்களில் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சுமார் 13,000 பேர் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. வார இறுதியில் கனத்த மழை பெய்யலாம் என்பதால் நிலைமை மோசமாகக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.
(Visited 11 times, 1 visits today)