திடீரென 80 சதவீதம் குறைந்த X இன் மதிப்பு – அதிர்ச்சியில் எலோன் மஸ்க்
சமூக ஊடக தளமான Twitter அல்லது X இன் மதிப்பு 80 சதவீதம் குறைந்துள்ளது.
முதலீட்டு நிறுவனமான Fidelityயை மேற்கோள் காட்டி, எலோன் மஸ்க்கின் பங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதை விட இப்போது 80% குறைவாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எலோன் மஸ்க் 2022 அக்டோபரில் 44 பில்லியன் டொலரை செலவிட்டார், ஒகஸ்ட் மாத இறுதியில் அந்தப் பங்குகளின் மதிப்பு 4.2 மில்லியன் டொலராக குறைந்துள்ளது என்று Fidelity தெரிவித்துள்ளது.
இரண்டாவது காலாண்டில் 570 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்டிருப்பதாக நிறுவனம் கூறியது, முந்தைய ஆண்டை விட 6% அதிகமாகும்.
ஆனால் இந்த செய்திகள் குறித்து எலோன் மஸ்க் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





