இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்ற திட்டம் : ரணில் வெளியிட்ட அறிவிப்பு!
2030 ஆம் ஆண்டிற்குள் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு வசதியாக பொதுத்துறையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவன கட்டமைப்பை மறுசீரமைக்க 2024 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13.11) முன்மொழிந்தார்.
அதன்படி, பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான தலைமையையும் வழிகாட்டுதலையும் வழங்க முழு அதிகாரம் கொண்ட டிஜிட்டல் ஆணையம் நிறுவப்பட உள்ளது.
இது தவிர, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கவுன்சில் அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையம் ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய போக்குகளுக்கு பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இது அமைந்துள்ளது.
இந்தப் பணிகளுக்காக அடுத்த ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்குகளை அடைவது 2024 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.