தமிழ்நாடு

தேமுதிக கூட்டத்தில் கொடுக்கப்பட்ட உணவு… சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

இந்திய மாநிலம் தமிழகத்தில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் மிஞ்சிய உணவை சாப்பிட்ட மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக்தில் உள்ள விருத்தாச்சலத்தில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. அங்கு, மீதமான தக்காளி சாதத்தை கட்சி பிரமுகர் ஒருவர் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு கொண்டு வந்தார்.பின்பு, நேற்று இரவு அவர் கிராமத்தில் இருந்த மக்களுக்கு அந்த உணவை சாப்பிடுமாறு கொடுத்தார்.

சுவையான தக்காளி சாதம் செய்ய வேண்டுமா !!

இதனையடுத்து, கட்சி பிரமுகர் கொடுத்த உணவை அங்குள்ள மக்கள் சாப்பிட்டனர். பின்பு, உணவை சாப்பிட்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள 25 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனே, அவர்கள் குடும்பத்தினர் பதறிபோய் நள்ளிரவில் அனைவரையும் பண்ரூட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தேமுதிக கூட்டத்தில் உள்ள உணவை சாப்பிட மக்களுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்