சிங்கப்பூருக்குள் நுழைந்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்னர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.58 மணியளவில், தானா மேரா கோஸ்டல் சாலையின் கரையை நோக்கி வேகமாகச் செல்லும் படகு ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் அவர்களை வெற்றிகரமாக மடக்கி பிடித்து கைது செய்ததாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் இருவரிடமும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட 5 மீட்டர் நீளமுள்ள படகையும், சாட்சியமாக போலீசார் கைப்பற்றினர்.
இது குறித்த விசாரணை நடந்து வருவதாக SPF தெரிவித்துள்ளது. 36 மற்றும் 33 வயதுடைய அந்த இருவர் மீதும் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்றுக்கு குறையாமல் பிரம்படி விதிக்கப்படலாம்.