ஐரோப்பா

ஜெர்மனியில் விமான கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஜெர்மனியில் விமான கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் இந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிப்பட்ட 17 பில்லியன் யூரோ பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நாட்டின் முயற்சியின் ஒரு பகுதியாக விமான வரி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான வரியானது விமான டிக்கட்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், ஜேர்மனியில் இருந்து மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர்கள், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க நாடுகள் மற்றும் 2,500 கிலோ மீற்றர் தூரம் உள்ள மூன்றாம் நாடுகளுக்குப் பயணிக்கு விமானங்களுக்கு 15,53 யூரோக்கள் வழமான வரி விதிக்கப்படும் என்று ஜேர்மன் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய 1273 யூரோவுக்கு பதிலாக இந்த வரி விதிக்கப்படவுள்ளது.

மேலும், 6,000 கிலோ மீற்றருக்கு மேல் செல்லும் இடங்களுக்கான விமான வரி, தற்போதைய 58,06 யூரோவிலிருந்து 70,83 யூரோவாக ஆக உயர்த்தப்படும்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்