ஈரானைச் சுற்றி அதிகரிக்கும் பதற்றங்கள் – அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்த இங்கிலாந்து!
ஈரானைச் சுற்றி பதட்டங்கள் அதிகரித்து வருவதால், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்திய கிழக்கில் தங்கள் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து வருகின்றன.
RAF டைபூன் ஜெட் விமானங்கள் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க F-15E போர் விமானங்கள் ஜோர்டானை வந்தடைந்துள்ளன, மேலும் USS ஆபிரகாம் லிங்கன் கேரியர் தாக்குதல் குழு அப்பகுதியை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.
இதேவேளை மேற்கத்தேயை நாடுகளின் இந்நடவடிக்கையை ஈரான் கடுமையாக எதிர்த்துள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலையும் நேரடியான போராக கருதுவோம் என்றும், கடுமையாக பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





