புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை: வெளிவிவகார அமைச்சரிடம் தூதுவர் விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். “ இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு தூதுவரிடம் வலியுறுத்தினேன்.” என்று வெளிவிவகார அமைச்சர் […]




